பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமி!! புனிதம் கெட்டுவிட்டதாக தலைமுடி வெட்டப்பட்ட கொடூரம்

Report
27Shares

சத்தீஸ்கரில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதில் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி பஞ்சாயத்தில் சிறுமியின் முடி வெட்டப்பட்டது. கவர்தா மாவட்டத்தில் வேலைக்கு சென்ற சிறுமிக்கு அர்ஜூன் யாதவ் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதனையடுத்து அந்த நபருக்கு ரூ.5000 அபராதம் விதித்து சிறுமியின் தலைமுடி வெட்ட பஞ்சாயத்து உத்தரவிட்டது.

இதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றாலும், வறுப்புறுத்தலின் பேரில் தலைமுடி வெட்டப்பட்டது. இதனையறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அர்ஜீன் யாதவை கைது செய்துள்ளனர்.

1861 total views