இந்திய குடியரசு தினத்தில் இரு நாடுகளின் முக்கிய தலைவர்கள் சந்திப்பு!

Report
15Shares

2019 ம் ஆண்டு குடியரசு தினக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இந்த சந்திப்பினால் இரு நாடுகளிடையே நட்பு அதிகரிக்கு என எதிரிபார்க்கப்படுகிறது.

இதைபோல் கடந்த 2015ம் ஆண்டு இந்திய குடியரசு தின அணிவகுப்பை அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா பார்வையிட்டார். 2016ம் ஆண்டில் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டேயும், 2017ம் ஆண்டில் அபுதாபி பட்டத்து இளவரசரும், 2018ம் ஆண்டில் ஆசியான் நாடுகளின் பத்து தலைவர்களும் குடியரசு தின விழாவில் பங்கேற்றனர்.

இந்திய- அமெரிக்க நட்புறவின் அடையாளமாக மீண்டும் அமெரிக்க அதிபர் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிட இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அழைப்பை பரிசீலித்து வருவதாகவும், அவர் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

வர்த்தக ரீதியான முரண்பாடுகள், ஈரான் விவகாரம் ஆகியவற்றால் இரு நாடுகளிடையேயான நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ளது.இந்த இடைவெளியை சரி செய்வதற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் மீண்டும் இரு நாடுகளின் முக்கியத் தலைவர்களை ஒரே மேடையில் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

1067 total views