குடும்ப பிரச்சினையால் நடந்த பயங்கரம்! தாய் உட்பட 3 மகன்கள் உடல் கருகி பலி..

Report

குடும்ப பிரச்சினை காரணமாக மூன்று குழந்தைகள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொன்ற தாய், தானும் தீக்குளித்து இறந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் பரரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழகொண்டூரில் வீடு ஒன்று சற்று நேரத்திற்கு முன்னர் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்த காவற்துறை வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் மற்றும் 3 மகன்கள் உடல் கருகி இருந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணுக்கு { தாய் } குடும்ப பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்துள்ளது.

எனவே, குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்திருக்கலாம் என தெரிகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

6524 total views