தமிழ் மாணவிக்கு அமெரிக்காவில் உயர் விருது

Report

தமிழகத்தை சேர்ந்த மதுரை மாணவிக்கு அமெரிக்காவின் புகழ் பெற்ற ‘மார்கோனி சொசைட்டி பால் இளம் அறிஞர் என்ற விருது’ கிடைத்துள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மதுரை மாணவி ராஜலட்சுமி நந்தகுமார் என்பவர் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. ஆராய்ச்சி படிப்பு படித்து வருகிறார்.

இவர் தற்போது, சாதாரண திறன்பேசியை, உடலியக்கம் மற்றும் மூச்சுவிடுதல் போன்ற உடல் சார் செயல்பாடுகளை அளவிடும் அமைப்பாக மாற்றுகின்ற தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளார்.

"சோனார்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனமானது நீரில் மூழ்கிய பொருட்களின் ஒலி அலைகளை கொண்டு கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் ஆகும்.

இந்த கண்டுபிடிப்புக்காக ராஜலட்சுமி நந்தகுமார், 2018-ம் ஆண்டுக்கு உரிய மார்கோனி சொசைட்டி பால் பரான் என்ற இளம் அறிஞர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான செய்தியினை டெக்கான் குரோனிக்கல் தன்னுடைய நாளிதழில் வெளியிட்டுள்ளது.

இந்த விருது 5 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம்) ரொக்கப்பரிசைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

16107 total views