எவரெஸ்டில் 23 முறை ஏறி உலக சாதனை!

Report

நேபாள நாட்டைச் சேர்ந்த, கமிரிதா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தில், 23வது முறையாக ஏறி, உலக சாதனை படைத்துள்ளார்.

அண்டை நாடான, நேபாளத்தின் சொளுகும்பு மாவட்டம், தாமே கிராமத்தைச் சேர்ந்தவர், கமிரிதா ஷெர்பா, 49. இமயமலையில் உள்ள மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், இதுவரை, 22 முறை ஏறி, உலக சாதனை படைத்துள்ளார்.நேபாள நாட்டைச் சேர்ந்த, அபா ஷெர்பா, புர்பா தஷி ஷெர்பா ஆகியோர், 21 முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளனர்.

கடந்த, 2017ல், அபா மற்றும் புர்பா ஆகியோருடன் இணைந்து மலையேறினார் கமிரிதா ஷெர்பா. கடந்த ஆண்டு, 22வது முறையாக மலையேறிய கமிரிதா, அபா மற்றும் புர்பாவின் சாதனையை முறியடித்தார்.இதைத் தொடர்ந்து, இந்தாண்டு, 23வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த கமிரிதா ஷெர்பா, தன் உலக சாதனையை முறியடித்துள்ளார்.

2030 total views