இந்திய பிரதமர் மோடி இன்று தனது 69 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
பிறந்த தினமான இன்று வழக்கம் போல், சொந்த மாநிலமான குஜராத் சென்று, தனது தாயார் ஹீராபென் மோடியை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கேவடியா அணை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இன்று அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
இவ்வாண்டு தொடர்ச்சியான மழை பெய்து வருவதன் காரணமாக, குஜராத் மாநிலத்தின் நர்மதா ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 138.68 மீட்டர் ஆகும். இன்னும் 68 செ.மீ. நீர்மட்டம் உயர்ந்தால், அணை நிரம்பி வழியத் தொடங்கி விடும்.
அவ்வாறு நடந்தால், வரலாற்றில் அணை நிரம்பி வழிவது இதுவே முதல் முறையென தெரிவிக்கப்படுகிறது. இந்த சாதனையை காண பிரதமர் மோடி இன்று வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அங்கிருந்த 'Statue of Unity' சர்தார் வல்லபாய் படேல் உருவ சிலையை பார்வையிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளி பதிவிட்டார்.
இதனையடுத்து. நர்மதா நதியின் சர்தார் சரோவர் அணையை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர். சர்தார் சரோவர் அணை பகுதியில் இருந்த பட்டாம்பூச்சி பூங்காவில் பல வண்ண பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டு பிரதமர் மோடி மகிழ்ந்தார்.