ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகள்- ஒரேநாளில் திருமணம்!

Report

கடந்த 1995-ம் ஆண்டு, நவம்பர் 18-ம்தேதி இந்தியா கேரளாவின் திருவனந்தபுரம் , பொத்தன்கோடு நானுட்டுகாவு கிராமத்தில் பிரேம்குமார், ரமாதேவி தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 4 பெண் குழந்தைகளுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

அப்பொழுது இந்த செய்தி கேரளாவில் அனைத்து இடங்களிலும் பரவியது. ஒரு நிமிட இடைவெளியில் இந்த 5 குழந்தைகளும் பிறந்ததால் ஏறக்குறைய பார்ப்பதற்கு ஒரேமாதிரியாகத்தான் எல்லோரும் இருக்கிறார்கள்.

குழந்தைகள் எல்லோரும் உத்ரம் நடத்திரத்தில் பிறந்ததால் நான்கு பெண் குழந்தைகளுக்கும் உத்ரஜா, உத்தாரா, உத்தமா, உத்ரா என்றும் ஆண் குழந்தைக்கு உத்ராஜன் என்றும் பெயர் வைத்தனர்.

இந்த குழந்தைகளி்ன் தந்தை பிரேம் குமார் தனது வீட்டின் பெயரையும் பஞ்ச ரத்னம் என்று வைத்தார். இந்நிலையில் அவருக்கு தனது குழந்தைகள் 4 பேருக்கும் ஒரே மாதிரியான ஆடைகள், விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் வாங்குவது பெரிய சிரமமாக இருந்தது.

ஒரேநாளில் இந்த 5 குழந்தைகளும் ஒரே பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த 5 குழந்தைகளின் படிப்பதையும், வளர்வதையும் கேரள ஊடங்கங்கள் அவ்வப்போது கொண்டாடி வந்தன.

இந்நிலையில் பிரேம்குமார் செய்து வந்த தொழில் நஷ்டம் ஏற்படவே தற்கொலை செய்து கொண்டார். அவர் இறக்கும்போது இந்த 5 குழந்தைகளுக்கும் 9 வயதில் இருந்தனர்.

பிரேம்குமார் மனைவி ரமாதேவி இதய நோயாளி என்பதால் இந்த குழந்தைகள் 5 பேரையும் எவ்வாறு வளர்க்கப்போகிறேன் என்ற கலக்கத்தில் இருந்தார். உடனடியாக இந்த செய்தியை கையில் எடுத்து ஊடகங்கள் 5 குழந்தைகளின் நலனுக்காக செய்தி வெளியிட உதவிகள் குவியத் தொடங்கின.

கேரள அரசும், ரமாதேவிக்கு கூட்டுறவு வங்கியில் பணி வழங்கியது, ஏராளமான நல்ல உள்ளங்கள் இந்த குழந்தைகளுக்கு உதவி புரிந்தனர்.

இவ்வாறான நிலையில் காலங்கள் உருண்டோடி தற்போது இந்த பெண் குழந்தைகளும் வளர்ந்து திருமணத்துக்கு தயாராகியுள்ளன.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 26-ம்தேதி குருவாயூர் கிருஷ்ணன் கோயில் ஒரேநாளில் 4 பெண்களுக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் உத்தரா என்ற பெண் பேஷன் டிசைனராகவும், உத்தரஜா, உத்தம்மா மயக்கவியல் துறையிலும்,உத்தாரா பத்திரிகையாளராகவும் உள்ளனர். இவர்களுக்கு ஏற்ற மணமகன்கள் பார்க்கப்பட்டு திருமணம் முடிவு செய்யட்டுள்ளது.

இவர்களுடன் பிறந்த ஒரு சகோதரருக்கு மட்டும் இவர்களின் திருமணம் முடிந்தபின் நடைபெற உள்ளது.

இந்நிலையில் குழந்தைகளின் தாயார் கூறுகையில், என்னுடைய கணவர் திடீரென இறந்தவுடன் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. ஆனால் எனது குழந்தைகளுக்காக வாழ வேண்டிய நிலை இருந்தது, போராடினேன். துணிச்சல் இருந்தால், நிச்சயம் நாம் வாழவழி கிடைக்கும். நான் 5 குழந்தைகளுக்கும் வாய்ப்புகள் அனைத்தையும் சமமான அளவில்தான் வழங்கி வளர்த்தேன் என்கின்றார்.

அத்துடன் அனைவருக்கும் ஒரேநாில் திருமணம் நடத்த வேண்டும் எனும் என்ற என்னுடைய கணவரின் கனவை நான் நிறைவேற்றப்போகிறேன். என் மகன் வாழ்க்கையில் இன்னும் உயரமான நிலையை அடைய இருக்கிறான் அவனுக்கு தாமதமாக திருமணம் நடக்கும் எனத்தெரிவித்துள்ளார் அந்த பாசமான தாய்.

14815 total views