180 பயணிகளுடன் புல்வெளியில் தரையிரங்கிய விமானத்தின் திக் திக் வீடியோ

Report

180 பயணிகளுடன்பெங்களூரு விமான நிலையத்தின் புல்வெளியில்நிலைதடுமாறி சென்ற விமானம் ஒன்று,அபாயகரமான முறையில் டேக்-ஆஃப் ஆகியுள்ளமைபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறித்த விமானத்தை இயக்கிய பைலட்டை அரசுதரப்பு சஸ்பெண்ட் செய்துள்ளது.

அத்துடன் பதறவைக்கும்இச்சம்பவம் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சிகர தகவல்கள் வந்துள்ளன.

சம்பவம் தொடர்பில்தெரியவருகையில்,

GoAir நிறுவனத்தைச்சேர்ந்த A320 விமானம், நாக்பூரில் இருந்து கடந்த திங்கட்கிழமை டேக்-ஆஃப் ஆகியுள்ளது.

பெங்களூருவில் அந்த விமானம் தரையிறங்குவதாகஇருந்த நிலையில் , விமானம் லேண்ட் ஆகும்போது,நிலைதடுமாறி ரன்-வேக்கு அருகிலிருந்தபுல்வெளிக்கு சறுக்கிச் சென்றுள்ளது.

இதைத் தொடர்ந்து பைலட், விமானத்தை டேக்-ஆஃப் செய்து ஐதராபாத்தில்அவசரநிலையில் லேண்ட் செய்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தஅனைத்துப் பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.

விமானம்பெங்களூருவிலிருந்து மீண்டும் அவசர கதியில் புறப்பட்டபோது, அதன் ஒரு இன்ஜின்பழுதடைந்த நிலையில் இருந்ததாக விமான ஒழுங்குமுறை ஆணையமானடிஜிசிஏ-வின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து கோஏர்நிறுவனம், “11 நவம்பர், 2019 அன்று கோஏர் ஃப்லைட்ஜி8 811 நாக்பூரிலிருந்து பெங்களூருவுக்குச் செல்வதாக இருந்தது. ஆனால், பெங்களூருவிலிருந்து ஐதராபாத்திற்குஅந்த விமானம் இயக்கப்பட்டது. ஐதராபாத்தில்விமானத்தில் இருந்த அத்தனைப் பேரும்பத்திரமாக தரையிறக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் நடந்போது விமானத்தில்பயணம் செய்த ஷஃபீக் அம்சா,NDTV-யிடம் தனது அனுபவம் பற்றிபகிர்ந்தபோது,

“பெங்களூருவில் நாங்கள் தரையிறங்க உள்ளசில நிமிடங்களுக்கு முன்னர் வானிலை நன்றாகஇருப்பதாகவே தெரிவிக்கப்பட்டது. ஆனால், நிலத்தில் நிலைமைவேறாக இருந்தது. விமானத்தை சரியாக லேண்ட் செய்யமுடியாத காரணத்தால், பைலட், மீண்டும் வானில்பறக்கத் தொடங்கினார்.

அதன் பின்னர்பைலட், பெங்களூருவில் லேண்ட் செய்ய முடியவில்லைஎன்பதை தெரிவித்தார். நான் ரன்-வேக்குஏதாவது ஆகியிருக்கும் என்று நினைத்தேன். ஆனால்விமானம் புல் தரையில்சென்றிருக்கும் என்று கூறியுள்ளார்.

எனினும் அப்போதுஇந்த சம்பவம் இவ்வளவு திகிலைக்கிளப்பவில்லை என்றும் ஏனெனில் , எங்களுக்கு என்ன நடக்கிறது என்பதேசரியாக தெரிந்திருக்கவில்லை, என வியப்புடன்கூறியுள்ளார்.

20859 total views