அயோத்தி விவகாரம்- மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் திட்டம்?

Report

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மறுசீராய்வு மனுவொன்றை தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் ஆலோசனை நடத்திவருதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் குறித்த அமைப்புகள் இன்று லக்னோவில் கூடி ஆலோசித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ஆலோசனையின் இறுதி முடிவு பிற்பகல் 3 மணியளவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான குழு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியிருந்தது.

அதன்படி அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்றும், இஸ்லாமியர்களுக்கு மாற்று நிலமொன்றை வழங்குவதாகவும் அவர்கள் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1260 total views