மனைவி, 6 மகள்களை வீட்டை விட்டு விரட்டிய கணவன்: என்ன காரணம் தெரியுமா?

Report

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் 40 வயது பெண், தனது 6 மகள்களோடு காவல் நிலையத்துக்கு வந்து தன்னை கணவர் வீட்டை விட்டுத் துரத்தி விட்டதாக புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து பெண் பிள்ளைகளையே பெற்றுக் கொடுத்ததால் அதிருப்தி அடைந்த கணவர், மனைவி மற்றும் 6 மகள்களையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, கணவர் மற்றும் அவரது மூத்த சகோதரர் ஆகியோர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வருகிறார்கள்.

முதல் பெண் 14 – 15 வயதிலும், கடைசி மகள் இரண்டரை வயதிலும் இருக்கும் நிலையில், தன்னை விவாகரத்து செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள, கணவர் லக்மணின் சகோதரர் வலியுறுத்துவதாகவும், இருவரும் சேர்ந்து தன்னை அடித்துத் துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும் அப்பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

1582 total views