வெங்காயத்தின் விலை குறைவு..... ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா?

Report

வெங்காயத்தின் விலையை நினைத்தாலே கண் கலங்கும் அளவிற்கு நாளுக்கு விலை ஏற்றம் கண்டு வருகிறது.

வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? விலை ஏற்றத்தை குறைக்க எது போன்ற நடவடிக்கைகள் தேவை? என்பது போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மனிதன் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் தவறாமல் இடம்பெறும் பொருள் வெங்காயம். அண்மைக்காலமாக வெங்காயத்தின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்களிலிருந்து வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள்ளதால், இரண்டு நாட்களில் 40 ரூபாய் வரை விலை குறைந்துள்ளது.

இங்கு இரண்டு தினங்களுக்கு முன்பு, கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம் விலை குறைந்து 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கர்நாடகா மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து 8 லாரிகளில் 80 டன் பெரிய வெங்காயம் வந்துள்ளதால், விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

2768 total views