குழந்தைகளின் வாயில் விஷத்தை ஊற்றிய பின், தாமும் விஷத்தை அருந்திய பெற்றோர்: கதறியழும் உறவினர்கள்

Report

இந்தியா விழுப்புரத்தில் நிகழ்ந்த விடயம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா விழுப்புரத்தில் தூங்கி கொண்டிருந்த 3 குழந்தைகளையும், ஒவ்வொருவராக எழுப்பி.. தன் மடியில் அமர்த்தி, கண்ணீருடன் விஷத்தை அவர்களது வாயில் ஊற்றி உள்ளார் குடும்பத் தலைவியான சிவகாமி. இதன்பிறகுதான் அருண்-சிவகாமி தம்பதியினர் சயனைட்டை குடித்து உயிரை விட்டுள்ளனர்.

விழுப்புரம் சித்தேரிக்கரை சலாமத் நகரில் வசித்து வந்தார் அருண். இவருக்கு வயது 33. அதே பகுதியில் பட்டறை வைத்து நகை தொழில் செய்து வந்தார். மனைவி பெயர் சிவகாமி.. கல்யாணம் ஆகி 7 வருடங்கள் ஆகி.. பிரியதர்‌ஷினி 6, யுவஸ்ரீ 3, பாரதி 4 மாத குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், சொந்தவீடு நல்ல வருமானம் என மகிழ்ச்சியாகவே அருண் வாழ்ந்துள்ளார். சீது காலத்தின் பின்னர் நஷ்டம் வர ஆரம்பித்தது. கடன் வாங்கியும் சமாளிக்க முடியாத நிலையில்தான், இரகசியமாக லாட்டரி சீட்டு அந்த பகுதியில் விற்பது அருணுக்கு தெரியவந்தது. பட்டறை 3 நம்பர் லாட்டரி வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைப்பு அருணுக்கு ஆழமாக விழுந்தது.

பட்டறையில் வரும் கொஞ்சம் நஞ்சம் பணத்தையும் லாட்டரியில்தான் போட்டுள்ளார் அருண். கடைசியில் சீட்டு வாங்கியே நஷ்டம் இன்னும் அதிகமாகிவிட்டது. பட்டறையில் 15 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கும் சம்பளம் தரமுடியவில்லை. பட்டறையையும் நடத்த முடியவில்லை. அதனால் வேறு ஒரு பட்டறைக்கு சம்பளத்துக்கு செல்லும் நிலை அருணுக்கு ஏற்பட்டது.

சொந்த வீட்டை ஒன்றரை வருஷத்திலேயே விற்றுவிட்டு, கடனை அடைத்து ஒரு வாடகை வீட்டுக்கு குடியேறினார். தொடர்ந்து சமாளிக்க முடியாத இக்கட்டான நிலைக்கு ஆளானார் அருண். அத்தோடு, மூன்றும் பெண் குழந்தைகள் வேறு. எப்படி வாழ போவது என்று விழிபிதுங்கிய நிலையில்தான் குடும்பத்துடன் தற்கொலை என்ற முடிவுக்கு வந்தார் அருண்.

முதலில் தம்பதி மட்டும்தான் தற்கொலை செய்வதாக இருந்தது.. ஆனால், குழந்தைகளை இனி யார் கவனிப்பார்கள் என்ற பீதியில், அவர்களையும் கொல்ல மனதை கல்லாக்கி கொண்டே மேற்படி தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளனர்.

நேற்றுமுன்தினம் வீட்டுக்கு வரும்போதே சயனைடு பவுடரை வாங்கி வந்தார் அருண். தூங்கி கொண்டிருந்த குழந்தையை எழுப்பி சிவகாமி, தன் மடியில் இறுத்தி, இந்த விஷத்தை அவர்கள் வாயில் ஊற்றியுள்ளார்.. அரை குறை தூக்கத்திலேயே குழந்தைகளும் அதை குடித்துவிட்டு அப்படியே படுத்து கொண்டன. கொஞ்ச நேரத்தில் வாயில் நுரை தள்ளி..கீழே விழவே, இதனை அருண் கதறி அழுதபடியே தனது தொலைபேசியில் அருண் காணொளி எடுத்துள்ளார்.

பின்னர் தம்பதி தற்கொலைக்கு முன்பாகத்தான், அருண் காணொளியில் பேசி, நண்பர்களுக்கும் அதை அனுப்பி வைத்தார். இதன்பிறகு இருவரும் சயனைடு குடித்து விழுந்தனர்.. நண்பர்கள் பதறியடித்து, கதவை உடைத்து கொண்டு உள்ளே போவதற்குள் எல்லாருமே உயிரிழந்துவிட்டனர். 5 பேரின் உடலை பார்த்து உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கதறி கதறி அழுதனர். காணொளியில் அருண் பேசும்போது,"விழுப்புரத்துல லாட்டரி சீட்டை ஒழிச்சிடுங்கப்பா" என்று தெரிவித்திருந்தார்.

குறித்த இச்சம்பவம் அப்பகுதியினரை பெரியுதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

4854 total views