2025-ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகள்- அமேசான் நிறுவனம் அதிரடி!

Report

இந்தியாவில் தங்கள் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், மின்சார வாகனங்கள் அதிகளவில் உபயோகப்படுத்தப்படும் எனவும் அந்த நிறுவனத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து வருடத்துக்குள் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் மூலம் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் அமேசான் (Amazon) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பஸாஸ் (Jeff Bezos).

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர் முன்னதாக, இந்தியாவில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் முதலீடுகளைச் செய்யப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்தியாவில் அமேசான் பில்லியன் டாலர்கள் அளவு முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவுக்கு எந்த நன்மையையும் அவர்கள் செய்யவில்லை.

இதனால், எந்த வகையிலும் இந்தியா பயனடையப்போவதில்லை என்று மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில், தான் இந்தியாவில் தங்கள் நிறுவனத்தின் மூலம் 2025-ம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜெஃப் பிஸாஸ்.

இந்தியாவில் 10 மில்லியனுக்கும் மேலான சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகர்களை ஆன்லைன் வணிகத்துக்கு அறிமுகப்படுத்தவும், 5,50,000 வணிகர்களின் வணிகத்தை மேம்படுத்தவுமே இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்திருக்கிறார் ஜெஃப் பஸாஸ்.

Linkedin-ன் வேலை செய்வதற்கான சிறந்த நிறுவனங்களின் பட்டியலில் அமேசான் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவில் தங்கள் நிறுவனத்தில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும், மின்சார வாகனங்கள் அதிகளவில் உபயோகப்படுத்தப்படும் எனவும் அந்நிறுவனத் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

1065 total views