டிக்டாக் விபரீதம்; ஒருவர் பலி, மற்றொருவர் ஆபத்தான நிலையில்

Report

ஒடிஷா மாநிலம் பெர்ஹாம்பூரில், இளைஞர்கள், டிக்டாக்கில் காணொளி பதிவு செய்து கொண்டே இருசக்கர வாகனம் ஓட்டிய போது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிப சங்கர் சாஹு என்பவர், தனது மைத்துனருடன் ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். இருவரும், டிக்டாக்கில் காணொளி எடுத்தபடியே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

கஜுரியா என்ற பகுதியில் அவர்களது வாகனத்தின் மீது, டிரக் ஒன்று திடீரென மோதியதில், விபத்து ஏற்பட்டது.

படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ஷிப சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மைத்துனர் சிப பாட்ரோ ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

2591 total views