இந்தியாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி! தீவிர கட்டுப்பாட்டில்

Report

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாகச் சீனாவில் சுமார் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போ துவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாகவும், இந்த இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்றும் சீனாவிலிருந்து வெளியாகும் தகவல்கள் பரவுகிறது.

இந்த வைரஸ் அண்டை நாடுகளுக்கும் பரவுவதற்கு முன் அதன் மூலத்தைக் கண்டறிய வேண்டும் எனச் சீனா அரசுக்கு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியது. எனினும் இப்போது வரை இந்த வைரஸ் நோய்க்கு மாற்று கண்டறியப்படவில்லை.

இதற்கிடையே சீனா சென்றுவிட்டு நாடு திரும்பும் பயணிகளைச் சம்பந்தப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தீவிர உடல் பரிசோதனைக்குப் பின்னரே நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர்.

குறிப்பாக, தெர்மல் ஸ்கிரினீங் என்ற முறையில் நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வந்து இறங்கும் பயணிகளிடம் சோதனை நடத்தப்படுகிறது.

இந்த பரிசோதனைக்குப் பின்னரே அனைவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி, கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் சீனாவிலிருந்து வந்து இறங்கிய இந்தியர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையின் போது, 7 பேரைச் சந்தேகத்தின் அடிப்படையில் தனிமைப் படுத்தி மருத்துவமனைக்குப் பாதுகாப்பாகக் கொண்டு சென்றனர். இவர்களிடம் ரத்த மாதிரிகள் உள்படப் பரிசோதனைக்குத் தேவைப்படும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

விரைவில் முடிவுகள் வெளியாகும். சீனா சென்றுவிட்டு நாடு திரும்பிய நூற்றுக்கணக்கான பயணிகளில், இதுவரை 11 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு இருக்கலாம் எனத் தனியாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி கேரளாவில் 7 பேர், மும்பையில் 2 பேர், பெங்களூர், ஐதராபாத்தில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேர் ஆகும். இதுவரை யாருக்கும் நோய் தொற்று இருப்பது உறுதி ஆகாத சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சுகாதாரத் துறை தீவிரம் காட்டி வருகிறது.

1500 total views