300 துண்டுகளாக மனைவியை வெட்டி டிபன் பாக்ஸில் அடைத்த கொடூர கணவன்!

Report

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் வசித்து வந்த இந்திய ராணுவத்தின் ஓய்வுபெற்ற மருத்துவர் சோம்நாத் பரிதா. இவரது மனைவி உஷாஸ்ரீ சமலை.

இந்நிலையில் சோம்நாத் கடந்த 2013ம்ஆண்டு கொலை செய்த. பின்னர் அதனை மறைப்பதாக மனைவியின் உடலை சுமார் 300 துண்டுகளாக நறுக்கி 22 சின்ன டிபன் பாக்ஸில் அடைத்து வைத்து அதிலிருந்து துர்நாற்றம் வராமல் இருக்க பினாயிலை ஊற்றி வைத்துள்ளார்.

இதையடுத்து வெளிநாட்டிலிருந்த இவர்களின் பிள்ளைகள் அம்மாவை தொடர்பு கொள்ளமுடியவில்லை என உஷாஸ்ரீ சமலையின் சகோதரர் ரஞ்சனுக்கு தெரிவித்துள்ளார்.

இதன் பின்னர் அவர் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது தான், உஷாஸ்ரீ சமலை கொல்லப்பட்டிருப்பது தெரியவந்ததை அடுத்து சோம்நாத் பரிதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர்.

குர்தா மாவட்ட நீதிமன்றத்தில் ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

அதில் 78 வயதான பரிதாவிற்கு கொலை மற்றும் ஆதாரத்தை அழித்தது உள்ளிட்ட குற்றச்செயலுக்காக ஆயுள்தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

11233 total views