லண்டனில் இருந்து தமிழகத்திற்கு வந்த இருவருக்கு கொரோனா தொற்று...

Report

தமிழகத்தில் லண்டனில் இருந்து வந்த இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மெல்ல, மெல்ல தீவிரமாகி வருகிறது. தற்போது வரை 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக நாட்டில் மஹாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் லண்டனில் இருந்து சென்னை வந்தவர்கள் எனவும், 24 வயது இளைஞர் மற்றும் 65 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட இருவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 29-ஆக உயர்ந்துள்ளதாக, சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

562 total views