ஒரு கொலையை மறைக்க 9 கொலை செய்த கொடூரன்

Report

தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் ஒன்பது பேர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர்.

இந் நிலையில் சம்பவம் தொடர்பாக 24 வயது இளைஞர் ஒருவரை நேற்று போலீசார் கைது செய்துள்ளனர்.

மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தின் கிணற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர், பீகாரைச் சேர்ந்த இருவர், திரிபுரைவைச் சேர்ந்த ஒருவர் என 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இவர்கள் அனைவரும் தற்கொலை செய்துகொண்டார்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது தெரியாமல் இருந்தது வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் செய்த ஒரு கொலையை மறைக்க 9 பேரையும் அந்த இளைஞர் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

2958 total views