படிப்பதற்காக கனடா சென்ற இளைஞர்! குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்

Report

இந்தியாவிலிருந்து படிப்பதற்காக இளைஞர் ஒருவர் கனடா சென்றிருந்த நிலையில், அந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாபிலிருந்து ஹர்மிந்தர் சிங் (22) என்ற இளைஞர் கணினி அறிவியல் பயில்வதற்காக கனடாவுக்கு சென்றுள்ளார்.

படிப்பை முடித்த பிறகு, நிரந்தர வாழிட உரிமம் பெற அவர் முயன்றுவந்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிலிருக்கும் ஹர்மிந்தரின் தந்தைக்கு நேற்று காலை கனடாவிலிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.

அதில் ஹர்மிந்தர் தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்துள்ளார் அவரது தந்தை.

ஹர்மிந்தர் தினமும் தங்களுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர், அவர் மகிழ்ச்சியாக இருந்ததாகவும், இது தற்கொலை அல்ல, வேறு ஏதோ நடந்துள்ளதென தாங்கள் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மகனின் இறப்பு தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்க தாங்கள் கோரியுள்ளதாக தெரிவித்துள்ள ஹர்மிந்தரின் குடும்பத்தினர், அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர வெளியுறவு அமைச்சகத்தின் உதவியை நாடியுள்ளனர்.

11794 total views