35 குட்டிகளை ஈன்ற ரஸல்ஸ் வைப்பர் இனபாம்பு

Report

தமிழ் நாட்டின் கோயம்பூத்தூர் நகரிலுள்ள மிருகக் காட்சிசாலையில் பாம்பொன்று 35 குட்டிகளை ஈன்றுள்ளது.

ஏனைய பாம்புகளைப் போன்றல்லாமல் ரஸல்ஸ் வைப்பர் இனத்தைச் சேர்ந்த பாம்புகள் 60 குட்டிகள் வரை ஈனக்கூடியவை என மேற்படி மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

‘எமது மிருகக்காட்சிசாலையில் அண்மையில் மற்றொரு பாம்பு 33 குட்டிகளை ஈன்றிருந்தது. இவை 40 முதல் 60 குட்டிகளை ஈனக்கூடியவை‘ என அவர் தெரிவித்துள்ளார்.

இப்பாம்பு கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள வீடொன்றிலிருந்து பிடிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

மேற்படி பாம்புக்குட்டிகள் இந்திய வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவம் பணிப்பாளர் செந்தில்நாதன் கூறினார்.

5476 total views