மனைவியிடம் தனக்கு கொரோனா எனக் கூறி இணைப்பை துண்டித்த கணவர்...! தேடிச்சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் மனீஷ் மிஸ்ரா. திருமணமான இவர் தனது மனைவியுடன் ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி தனது மனைவிக்கு அலைபேசி அழைப்பு செய்து, தனக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாகவும், இதனால் தான் உயிர் பிழைக்கமாட்டேன் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மிஸ்ராவின் மனைவி தனது கணவரின் அலைபேசிக்கு மீண்டும் தொடர்பு கொண்டபோது அவரின் அலைபேசிஅணைத்துவைக்கப்பட்டிருந்ததுடன் மிஸ்ரா தனது வீட்டிற்கு வரவே இல்லை.

இந்தநிலையில் மிஸ்ராவின் மனைவி தனது கணவரை காணவில்லை என பொலிஸ்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது மிஸ்ராவின் அலைபேசி சிக்னல் கடைசியாக கிடைத்த பகுதியில் ஆய்வு செய்தனர்.

அங்கு மிஸ்ராவின் பைக், ஹெல்மெட் இருப்பதை கண்டுபிடித்த நிலையில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் ஒரு காரில் பயணம் செய்தது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து நடத்திய தீவிர விசாரணையில், மிஸ்ரா அப்பெண்ணுடன் மத்திய பிரதேசத்திற்கு பயணம் சென்றது தெரியவந்தது.

அவரை பிடிப்பதற்காக மும்பை பொலிஸார் மத்திய பிரதேசம் விரைந்த

நிலையில் அங்கு மிஸ்ரா வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவந்ததை கண்டு பிடித்தனர்.

அதன்பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மிஸ்ராவுக்கும் வேறு ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு,அவர்கள் இருவரும் தனியாக குடும்பம் நடத்த விரும்பியதும் தெரியவந்துள்ளது.

17595 total views