திருமணம் செய்ய மறுத்த காதலன்; அசிட் வீசிய இளம்பெண்

Report

பெண்கள் மீது இளைஞர்கள் திராவகம் வீசிய சம்பவத்தைக் கேள்விப் பட்டுள்ளோம்.

ஆனால் இதற்கு நேர் மாறாக, இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் காதலித்து விட்டு, திருமணம் செய்ய மறுத்த காதலன் மீது இளம்பெண் ஒருவர் திராவகம் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் கோவாய் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரும்,குறித்த பெண்ணும், கடந்த எட்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர்.

பள்ளிப் பருவத்தில் ஆரம்பித்த இவர்கள் காதலில் சமீப காலமாக குறித்த இளைஞர் இன்ன்ரு யுவதியுடன் சுற்றித்திரிந்துள்ளார்.

இதனையடுத்து தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு நீண்டகால தோழியான யுவதி வலியுறுத்தியதாகத் தெரிகிறது. எனினும் அவரை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞர் மறுத்து விட்டார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற யுவதி, காதலன் பினாதா மீது திராவகம் வீசிய நிலையில், படுகாயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த யுவதியை கைது செய்து பொலிஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது, யுவதியை 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதாக கூறப்படுகின்றது.

3100 total views