உங்களது மொபைலை லாக் செய்தால் உங்களுக்கு ஒரு பீட்சா இலவசம்! ஆதரத்துடன் வெளிவந்த காணொளி!

Report

நீங்கள் மனம் விட்டு உங்கள் நண்பர்களிடம் பேசினால் நாங்கள் இலவசமாக பீட்சா தருகிறோம் என US உணவகம் இன்று அறிவித்துள்ளது.

இன்றைய இளையதளைமுரைகளால் இந்த இரண்டு விஷயங்கள் இல்லாமல் இருக்க முடியாது. அதில், ஒன்று, இணையதளம் மற்றொன்று கைபேசி.

இன்றைய இளைஞர்கள் ஸ்மார்ட்ஃபோனை தூங்கும் நேரத்தை தவிர மற்ற எல்லா நேரத்திலும் துழாவி கொண்டிருப்பதே பெரும்பாலோரின் பழக்கமாக மாறிவிட்டது.

இப்படி வயது வித்தியாசமின்றி அதிகரித்துவரும் செல்ஃபோன் மோகத்தால், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு இடையே ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசுவதே அரிதாகிவிடுகிறது.

இந்த அவலநிலையை மாற்றும் நோக்கத்தில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ஃபிரஸ்னோ எனுமிடத்தில் இயங்கிவரும் பீட்ஸா விற்பனையகம், ஒரு நூதன முயற்சியை முன்னெடுத்துள்ளது.

குறைந்தபட்சம் நான்கு குடும்ப உறுப்பினர்கள் அல்லது நான்கு நண்பர்கள் தங்கள் கடைக்கு பீட்சா சாப்பிட வர வேண்டும்.

அப்படி வரும்போது, அவர்கள் அனைவரும் தங்கள் கைகளில் உள்ள ஸ்மார்ட்ஃபோன்களை லாக் செய்துவிட்டு, கடையின் லாக்கரில் வைத்துவிட வேண்டும்.

பீட்சா சாப்பிட்டு முடித்துவிட்டு வீடு திரும்பும் போது, தங்கள் ஃபோனை வாடிக்கையாளர்கள் திரும்ப பெற்று கொள்ளலாம்.

இவ்வாறு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு பீட்சா இலவசமாக வழங்கப்படும் என அந்த கடையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உறவுகளுக்கு இடையே நேரடி உரையாடலை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளதாக அந்த கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

295 total views