தங்கம் விலையில் வரலாறு காணாத மாற்றம்! வாடிக்கையாளர்கள் அதிருப்தி

Report

புத்தாண்டு பிறந்த நாளில் இருந்து தங்கம் விலை ஒரே அடியாக உயர்ந்து கொண்டே செல்கிறது என்ற கவலையில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

அதே போன்று, இன்றும் விலை உயர்ந்துள்ள நிலையில் தொடர்ந்து ஐந்து நாட்களாக விலையேற்றம் நீடிக்கிறது.

சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 16 ரூபாய் உயர்த்தப்பட்டு 3,828 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று இதன் விலை ரூ.3,812 ஆக மட்டுமே இருந்தது.

அதேபோல, 30,496 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 30,624 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்திருக்கிறது.

24 கேரட் தூய தங்கத்தின் விலை சென்னையில் கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்று அதன் விலை ரூ.4,015 ஆக இருக்கிறது. நேற்று 3,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 31,992 ரூபாயிலிருந்து இன்று 32,120 ரூபாயாக உயர்ந்துள்ளது. தூய தங்கத்தின் விலையும் 128 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.3,884 ஆகவும், டெல்லியில் ரூ.3,881 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.3,911 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.3,814 ஆகவும், பெங்களூருவில் ரூ.3,731 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.3,811 ஆகவும், ஒசூரில் ரூ.3,815 ஆகவும், கேரளாவில் ரூ.3,709 ஆகவும் இருக்கிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.50.40 ஆக இருக்கிறது.

நேற்று 50.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.50,400 ஆக இருக்கிறது.

3740 total views