6வயது சிறுவன் பள்ளி வேனில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Report

துபாயில் 6வயது இந்திய மாணவன் ஒன்ருவன் பள்ளி வேனிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்த மொஹம்மத் பர்கான் பைசல் என்ற மாணவன் அங்குள்ள இஸ்லாமிய மையத்தில் கல்வி பயின்று வருகின்றான் .

காலையில் பள்ளி வேனுக்குள் ஏறிய மாணவன், மயங்கி இருக்கிறான். காலை 8 மணியளவில் மற்ற மாணவர்கள் இறங்கி பள்ளிக்கு சென்ற நிலையில், குறித்த் மாணவனை யாரும் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிற்பகல் 3 மணியளவில் பள்ளி மாணவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக வேனை இயக்கிய போதுதான், உள்ளே மாணவன் இறந்து கிடப்பதை ஓட்டுநர் பார்த்துள்ளார்.

மொஹம்மத் பர்கானின் தந்தை பைசல் துபாய் மற்றும் கேரளாவில் பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறார்.

ஆஆறீண் மூன்று பிள்ளைகளில் கடைசி மகனை பறிகொடுத்த பெற்றோர் பெரும் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

753 total views