இரண்டு வாரங்களுக்கு முடக்கப்படும் டுபாய்!

Report

கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இரு வாரங்களுக்கு டுபாய் முடக்கப்படவுள்ளது.

அதன்படி சனிக்கிழமை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த பூட்டுதல் உத்தரவு அமுலில் இருக்கும் என டுபாயின் அரச செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

இந்த காலப் பகுதியில் அத்தியாவசிய தேவைகளைத் தவிர, தனிநபர்கள் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு குடும்ப உறுப்பினர் மட்டுமே உணவு அல்லது மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை கெள்வனவு செய்ய வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அதனை மீறும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

டுபாயில் மொத்தமாக 1,505 பேர் கொரோனா தொற்றாளர்காளக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 10 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மாத்திரம் 241 பேர் புதிய கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் டுபாயின் தேசிய சுகாதார ஆணையகம் தெரிவித்துள்ளது.

9912 total views