முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த சவுதி தீர்மானம்

Report

சவுதி அரேபியாவில் தற்போது நடைமுறையில் உள்ள முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஜூன் 21ஆம் தற்போது அமுலில் உள்ள முடக்கநிலை தளர்த்தப்படவுள்ளாக, அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும், புனித நகரான மெக்காவில் மட்டும் பகல் 3 மணி முதல் காலை 6 மணி வரை முடக்கநிலை உத்தரவு அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 31ஆம் திகதி முதல் ஜூன் 20 வரை, இது மெக்காவைத் தவிர மசூதிகளில் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அங்குள்ள முடக்கநிலை உத்தரவு மற்றும் பிரார்த்தனைக்கான கட்டுப்பாடுகள் ஜூன் 21ஆம் திகதி முதல் தளர்த்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, உள்நாட்டுக்குள் பயணம் செய்வது, மசூதிகளில் தொழுகை நடத்துவது, அரசு, தனியார் அலுவக பணிகளுக்கு செல்வது போன்றவற்றில் இருந்த தடை வரும் மே 31ஆம் திகதி முதல் விலக்கி கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

942 total views