நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது மற்றொரு விமானம் மோதல்: வைரல் வீடியோ

Report
303Shares

துருக்கி விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று, நின்று கொண்டிருந்த மற்றொரு விமானத்தின் பின்பக்கத்தில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து, தென்கொரியாவின் இன்சியான் நகருக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது.

அந்த விமானத்தில் 222 பயணிகள் மற்றும் சிப்பந்திகள் இருந்தனர். இந்நிலையில், விமானம் ஓடுதளத்தில் புறப்பட தயாராக சென்று கொண்டிருந்தபோது, அதன் இறக்கை ஓடுதளத்தை ஒட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துருக்கி விமானத்தின் இறக்கை மீது மோதியது.

இந்த மோதலில், துருக்கி விமானத்தின் பின்பக்க இறக்கை சேதமடைந்தது. மேலும், இறக்கை தீ பிடித்து எரிந்ததால் உடனடியாக கொரிய விமானம் நிறுத்தப்பட்டது.

பின்னர், அவசரமாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தினால் யாரும் காயமடையவில்லை.

இதனைத் தொடர்ந்து, கொரிய விமானமும் சேதமடைந்ததால் அதிலிருந்த பயணிகள் உடனடியாக இறக்கப்பட்டு, ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

13273 total views