இனி அனைவரும் நிம்மதியாக தூங்கலாம்! வட கொரிய தலைவரின் சந்திப்புக்குபின் டிரம்ப் போட்ட முதல் டுவிட்

Report
44Shares

உலகமே ஆவலாக எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்து முடிந்தது.

வட கொரியாவுக்கு எதிரான நடவடிக்கையை கைவிட அமெரிக்க அதிபரும், அணு ஆயுதங்களைக் கைவிட வடகொரிய அதிபரும் ஒப்புக்கொண்டனர். கொரிய தீபகற்கத்தில் இனி அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருநாட்டு அதிபர்களின் சந்திப்பு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்கா திரும்பினார் ட்ரம்ப். இதையடுத்து, ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், `வடகொரிய அதிபருடனான சந்திப்பு மிகவும் சுவாரஸ்யமாகவும், நம்பிக்கை தரும் வகையிலும் அமைந்துள்ளது.

இந்தச் சந்திப்புக்கு முன்பாக வடகொரியாவுடன் அமெரிக்கா போருக்குத் தயாராவதாகப் பலர் நினைத்துக்கொண்டிருந்தனர்.

முன்னாள் அதிபர் ஒபாமா கூட வடகொரியாதான் அமெரிக்காவின் முக்கிய எதிரி எனக் குறிப்பிட்டிருந்தார். இனிமேல் அப்படியான சூழல் இல்லை; அனைவரும் நிம்மதியாகத் தூங்கலாம்' இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

1374 total views