வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான்! லட்சகணக்கான மக்கள் வெளியேற்றம்

Report
257Shares

36 ஆண்டுகளுக்கு பிறகு மிக பலத்த மழை பெய்து வருவதால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது. இதனால் இதுவரை 86 லட்சம் பொதுமக்கள் வெளியேறி உள்ளனர்.

ஜப்பான் நாட்டில் 1982-ம் ஆண்டு பலத்த மழை பெய்தது, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டது.

அதேபோல் 36ஆண்டுகளுக்கு பிறகு இப்போதும் அங்கு மிக பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஜப்பானில் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கி கிடக்கிறது.

ஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து ள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

9271 total views