நவாஸ் ஷெரீப்புக்கு 12 மணிநேர பரோல்! மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பு

Report

மனைவியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்-ன் மனைவி குல்சூம் நவாஸ்(வயது 68).

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குல்சூம், லண்டன் ஹார்லி மருத்துவமனையில் கடந்த 2014-ம் ஆண்டு அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து, கடந்த சில நாட்களாகவே அவரது உடல்நிலை மோசமடைய, நேற்றிரவு திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷரிப் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார்.

அதன்பேரில் நவாஸ், மகள் மரியம், அவரது கணவர் ஆகியோருக்கு 12 மணி நேர பரோல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் ராவல்பிண்டியில் அடைக்கப்பட்டுள்ள சிறையில் இருந்து லாகூர் வந்தடைந்தனர்.

2537 total views