சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் குண்டு வெடிப்பு – 17 பேர் உயிரிழப்பு

Report

சிரியாவின் இட்லிப் மாகாணத்தில் வடமேற்கு பகுதியில் டக்ஃபிரி போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரொன்றில் இன்று இடம்பெற்ற வெடி விபத்தில் 17 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

சிரியத்தலைநகர் டமஸ்கஸ்ஸில் இருந்து வடக்குப்புறமாக 330 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஜிஸ்ர் அல்-ஷூக்கோர் நகரிலேயே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதன் போது, பல்வேறு கட்டங்களும் சேதமடைந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இந்தக் குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களில் அதிமானோர் பொதுமக்கள் எனவும், காயமடைந்தவர்களில் பலர் மோசமான நிலைமையில் உள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வைத்தியசாலைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

983 total views