பாகிஸ்தானில் அதிகரிக்கும் போலி திருமணம்! பெண்கள் சீனாவிற்கு கடத்தல்...

Report

பாகிஸ்தான் பெண்களை, போலியாக திருமணம் செய்து, அவர்களை சீனாவுக்கு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதை அடுத்து, இதை தடுக்க, சீன அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையை துவக்கியுள்ளனர்.

பாகிஸ்தானில் சீனாவைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியாற்றுகின்றனர். மேலும், பலர் வர்த்தக விஷயமாக, அடிக்கடி வந்து செல்கின்றனர். இவர்கள் பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்து, சீனாவுக்கு அழைத்து செல்வது சமீப காலமாக அதிகரித்துள்ளது.

இந்த பெண்கள் சீனாவுக்கு கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெண்களை கடத்தும் கும்பல் மீது, கடும் நடவடிக்கை எடுக்கும்படி புலனாய்வு அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, சீன துாதரக அதிகாரி லிஜியன் ஸாவோ செய்தியாளர்களிடம் கூறியதாவது, பாகிஸ்தானில் உள்ள மோசடி திருமண மையங்கள் உதவியுடன், அந்நாட்டைச் சேர்ந்த பெண்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளித்து சீனர்கள் திருமணம் செய்கின்றனர்.

பின் அவர்களை சீனா அழைத்து சென்று, பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, 'விசா' வழங்குவதில் கடும் சட்ட திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இந்த ஆண்டு மட்டும், 140 பாகிஸ்தான் பெண்களை திருமணம் செய்த சீனர்கள், அவர்களை சீனாவுக்கு அழைத்துச் செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தனர். அதில் 50 தம்பதியருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டது. மீதியுள்ள 90 பேரின் விசா நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

1165 total views