போயிங் விமானத்திடம் 4,883 கோடி நட்டஈடு கேட்கும் பெண்!

Report

எதியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மக்ஸ் ரக விமானம் எத்தியோப்பியா நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் கடந்த மார்ச் மாதம் விபத்துக்குள்ளானது.

விமானத்தில் பயணம் செய்த 157 பேரும் இந்த சம்பவத்தில் உயிர் இழந்தனர். இதே ரக விமானம் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தோனேசியாவில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.

5 மாதங்களில் அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. விமானத்தின் முக்கியமான மென்பொருளில் குறைபாடு இருந்ததை போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இந்த நிலையில், எதியோப்பியாவில் நடந்த விபத்தில் தனது கணவரை இழந்த பிரான்சை சேர்ந்த நாடெஜ் டூபோஸ் சீக்ஸ் என்கிற பெண் தனது கணவரின் மரணத்திற்கு 276 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு போயிங் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

போயிங் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்காவின் சிகாகோ நகர நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

1713 total views