மர மனிதனை நினைவிருக்கிறதா? இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்று பாருங்கள்.!

Report

மர மனிதன் அறிகுறி என்ற நோயால் பாதிக்கப்பட்டு கைகளில் மரம் போன்ற வளர்ச்சியால் வலியும் வெட்கமும் அனுபவித்து வந்த ஒரு நபரிடம் இப்போது அறுவை சிகிச்சைக்குப்பின் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.

காஸாவைச் சேர்ந்த Mahmoud Taluli (44), epidermodysplasia verruciformis (EV) என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

உடலில் தோன்றும் அசாதாரண வளர்ச்சிகளை உண்டாக்கும் வைரஸ்களுடன் போரிட இயலாத நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் இந்த நோய் ஏற்படுவதாக கருதப்படுகிறது.

தனது கைகளில் ஏற்பட்ட இந்த வளர்ச்சியால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவதியுற்று வந்த Taluliக்கு இரண்டு ஆண்டுகளுக்குமுன் அறுவை சிகிச்சை மூலம் அந்த மரம் போன்ற வளர்ச்சி அகற்றப்பட்டது.

என்றாலும் அவை மீண்டும் வளர்ந்ததால் 2017இலிருந்து நான்கு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய நிலை Taluliக்கு ஏற்பட்டது.

அவருக்கு இன்னும் ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த வளர்ச்சிக்கு காரணமான வேர்களும் அகற்றப்பட வேண்டியுள்ளது.

ஒரு கட்டத்தில் சில மருத்துவர்கள் Taluliயின் கைகளை அகற்ற வேண்டியதுதான் என்று கூறிவிட, Hadassahவைச் சேர்ந்த எலும்பியல் மருத்துவரான Dr Michael Chernofsky, வெற்றிகரமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரை ஒரு சாதாரண மனிதனாக்கியிருக்கிறார்.

எப்படியோ, ஒரு வழியாக ஒரு சாதாரண மனிதனாக, கடைசியில் தனது பிள்ளைகளுடன் தன்னால் விளையாட முடியும் என்பதில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்கிறார் Taluli.

3226 total views