ஆப்கானிஸ்தான் - ராணுவ தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் பலி

Report

ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசு படையினருக்கும் இடையே தொடர்ந்து நீண்டகால போர் நீடித்து வருகிறது. பயங்கரவாத குழுக்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அதிபர் விடுத்த அழைப்பு தோல்வியில் முடிந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் வடக்கு பகுதியில் உள்ள பால்க் மாகாணத்தில் ஆலம் கில் பகுதியில் பதுங்கியுள்ள தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து அந்நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 16 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்தனர். பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர் என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

527 total views