ராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் - 5 வீரர்கள் நேர்ந்த பரிதாபம்!

Report

ஏமன் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ராணுவ சோதனைச் சாவடி மீது அல் கொய்தா பயங்கரவாதிகள் இன்று நடத்திய தாக்குதல் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஈரான் அரசின் ஆதரவுடன் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஹவுத்தி இன மக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள்மீது உள்நாட்டுப் படைகளும் அண்டைநாடான சவுதி அரேபியா தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக நேசநாட்டுப் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதுதவிர, சமீபகாலமாக இங்கு மீண்டும் தலையெடுத்து வரும் அல் கொய்தா பயங்கரவாதிகள் அரசுப்படைகள் மீது அவ்வப்போது திடீரென அதிரடி தாக்குதல் நடத்துகின்றனர்.

அவ்வகையில், நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அப்யான் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ சோதனைச்சாவடியின் மீது இன்று அல்கொய்தா பயங்கரவாதிகள் இன்று ராக்கெட்டுகளை வீசியும் துப்பாக்கிகளால் சுட்டும் நடத்திய தாக்குதலில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

645 total views