பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கோர விபத்து : மாணவர்கள் உள்பட 9 பேர் நேர்ந்த பரிதாபம்!

Report

பிலிப்பைன்ஸ் நாட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள பலோஜோன் நகரில் இருந்து சிபூ மாகாணம் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில் 11 முதல் 12 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்கள் பயணித்தனர்.

அவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க சென்றனர். பள்ளி குழந்தைகளுடன் இணைந்து அவர்களது பெற்றோர்கள் சிலரும் அந்த லாரியில் பயணித்தனர்.

பலோஜோன் நகரின் மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 8 பள்ளி மாணவர்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த 20 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

615 total views