சாட் நாட்டில் தற்கொலைப்படை தாக்குதல் : 6 பேர் உடல் சிதறி பலி!

Report

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சாட் குடியரசில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் சாட் குடியரசு என்ற நாடு உள்ளது. இந்நாட்டை சுற்றி லிபியா, சூடான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளது.

இங்கு போகோ ஹாரம், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகிறது. பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அந்நாட்டின் நைஜீரியா எல்லையோரம் கைகா கிண்ட்ஜிரியா என்ற பகுதி உள்ளது. இங்கு வந்த பெண் போகோ ஹாரம் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டுவந்த வெடிகுண்டுகளை திடீரென வெடிக்க செய்தார்.

இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

383 total views