சீனா கடலில் மூழ்கிய கப்பல் : 7 பேர் பலி! இருவர் மாயம்

Report

சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் இயற்கையின் சீற்றம் காரணமாக கப்பல் ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.

சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் இருந்த வந்த கப்பல் ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

குறித்த கப்பல் சீனாவைன் ரிசாவோ நகர துறைமுகம் அருகே கடலில் மூழ்கியது.

தகவல் அறிந்து அங்கு சென்ற மீட்புப்படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இந்த அனர்த்தத்தில் 7 பேர் பலியாகியதோடு இருவர் கணாமல் போயுள்ளதாகவும், மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

அதோடு காணாமல் போனோரை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.

இதேவேளை இந்த விபத்து நிகழ்ந்த போது மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசியதாக மீட்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

907 total views