தாய்லாந்தில் கடற்பசுக்கு எமனான பிளாஸ்டிக்!

Report

தாய்லாந்து கடலில் கரையொதுங்கிய கடற்பசுவின், குடலில் பிளாஸ்டிக் சிக்கியிருந்ததால் உடல்நலம் குன்றி கடற்பசு உயிரிழந்துள்ளது.

உலக நாடுகளின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பால் ஆண்டுதோறும், கடலில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு பல டன்களாக உயர்ந்து வருகிறது.

இதனை குறைக்க தற்போது, தாய்லாந்து உள்ளிட்ட 10 தென்கிழக்கு ஆசிய நாடுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்தநிலையில், கடந்த வாரம் தாய்லாந்து கடற்கரை பகுதியில் நீர்வாழ் பாலூட்டி உயிரினமான கடற்பசு ஒன்று கரையொதுங்கியது.

இந்த உயிரினம் இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் பல முறை காயங்களுடன் வந்திருந்ததால், அதனை அன்புடன் கவனித்த கடல்சார் உயிரினங்களை பாதுகாக்கும் அதிகாரிகள், அதற்கு ‘மரியம்’ என பெயரிட்டு, சிகிச்சை அளித்து, மீண்டும் கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கரைதிரும்பிய ‘மரியத்துக்கு’ அதிகாரிகள் உணவு அளித்தபோது அது உண்ணவில்லை.

இன்றையதினம் மரியம் உயிரிழந்த நிலையில் அதன் உடலை உடற்கூறாய்வு செய்தபோது , மரியத்தின் குடலில் பிளாஸ்டிக் துண்டுகள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தாய்லாந்தில், கடற்பசு அருகி வரும் உயிரினமாக இருப்பதால், அது பாதுகாக்கப்பட வேண்டிய 19 வனவிலங்குகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

1018 total views