விநோத உடை அலங்காரத்துடன் வந்த நாய்கள்

Report

ஜார்ஜியா நாட்டில் இடம்பெற்ற நாய்களிற்கான கண்காட்சியில், விநோத உடை அலங்காரத்துடன் நாய்கள் கலந்துகொண்டன.

சர்வதேச அளவில் கொண்டாடப்படும் ‘டிராகன் கான் பாப்’ என்ற செல்லப்பிராணிகளுக்கான கண்காட்சி விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல வித நாய்கள் பங்கேற்கும் என்பதால் அதற்கு தயாராகும் நோக்கில், அட்லாண்டா நகரில் உள்ள ‘யுட்ரஃப் பூங்கா’ ஒன்றில், ‘டாக்கி கான்’ என்ற நாய் கண்காட்சி நடைபெற்றது.

இதில் டால்மேஷியன், லேப்ரடார் ரெட்டீரவர், சைபீரியன் ஹஸ்கி, உள்ளிட்ட பல வகைகளை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் பங்கேற்றன.

இந்நிலையில் எஜமானர்கள் தங்களது வளர்ப்பு நாய்களுக்கு பிரத்யேகமாக உடை தயாரித்து அதன், தலை, உடல் பகுதிகளில் அணிவித்து அழைத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1213 total views