மருத்துவமனையில் சக நோயாளிகள் நான்கு பேரை அடித்துக் கொன்ற நபர்!

Report

போதைக்கு அடிமையான நபர் மனநல மருத்துவமனையில் சக நோயாளிகளை கம்பியால் தாக்கியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ருமேனியாவின் தென்கிழக்கில் உள்ள புஜாயு கவுன்ட்டியில் நரம்பியல் மனநல மருத்துவமனை உள்ளது. இங்கு பலநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுடன் போதைக்கு அடிமையான 38 வயதைச் சேர்ந்த நபர் ஒருவரும் சிகிச்சை பெற்று வந்தார்.

இன்று காலை போதைக்கு அடிமையான நபர் திடீரென குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தப்படும் இரும்பு கம்பியை எடுத்து சக நோயாளிகளை சரமாரியாக தாக்கினார்.

இதில் மூன்று பேர் படுக்கையிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

9 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளை தாக்கியதும் அங்கிருந்து தப்ப முயன்ற அவரை, போலீசார் கைது செய்தனர்.

1148 total views