உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்த கொலம்பியா விருப்பம்

Report

2030ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை ஈகுவடார்,மற்றும் பெரு நாடுகளுடன் கூட்டாக சேர்ந்து நடத்துவதற்கு விண்ணப்பிக்க போவதாக கொலம்பியா தெரிவித்துள்ளது.

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, கத்தார் நாட்டில் வரும் 2022ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற உள்ளது.

இதையடுத்து 2026ஆம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய 3 நாடுகளும் கூட்டாக இணைந்து உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்துகின்றன.

இதையடுத்து 2030ஆம் ஆண்டில் உலக கோப்பை கால்பந்து போட்டியை எங்கு நடத்துவது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட இருக்கிறது.

இந்நிலையில் இதற்காக அர்ஜெண்டினா, உருகுவே, பராகுவே, சிலி ஆகிய 4 நாடுகள் கூட்டாக விண்ணப்பிக்க போவதாக அறிவித்துள்ள நிலையில், ஈகுவடார், பெரு ஆகிய 2 நாடுகளும் கூட்டாக போட்டியை நடத்த விண்ணப்பிக்க போவதாக தெரிவித்திருந்தன.

மேலும் தங்களுடன் சேரும்படி கொலம்பியாவுக்கு குறித்த நாடுகள் அழைப்பு விடுத்திருந்தன.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள கொலம்பியா அதிபர் இவான் துஹியு ((Ivan Duque )) 2030ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியை ஈகுவடார், பெரு நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக நடத்துவதற்கு கொலம்பியா விண்ணப்பிக்கும் என தெரிவித்துள்ளார்.

1179 total views