சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி இராணுவம் தாக்குதல்! 637 பலி

Report

சிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 637 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் வடக்கு பகுதியில் உள்ள குர்திஷ் மக்களை குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை என்ற போராளிகள் அமைப்பு பாதுகாக்கிறது.

சிரியாவில் இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டுவதில் அமெரிக்க படைகள் மற்றும் சிரிய கிளர்ச்சிப் படைகளுடன் இணைந்து குர்திஷ் போராளிகள் குழு போரிட்டது.

மேலும், பிடிபட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகள் குர்திஷ் மக்கள் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த போராளிகள் குழு தனி நாடு அமைக்கும் நோக்கில் சிரியாவில் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சி என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்நாட்டின் எல்லையில் இருந்து துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல்கள் நடத்தி வந்தது.

இந்த தனி நாடு கோரிக்கையை விரும்பாத துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் தங்கள் நாட்டிலும் சிரியாவிலும் செயல்பட்டு வரும் குர்திஷ்தான் தொழிலாளர்கள் கட்சியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.

இதற்கிடையில், சிரியாவின் வடக்கு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறுவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவதாக டிரம்ப் அறிவித்ததையடுத்து துருக்கி அதிபர் தாயீப் எர்டோகன் சிரிய நாட்டு எல்லைக்குள் சுமார் 32 கி.மீ. அளவிலான பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி அதில் தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை குடியமர்த்த திட்டம் தீட்டினார்.

ஆகையால், 'அமைதி வசந்தம்’ என்ற பெயரில் துருக்கி கடந்த 9-ம் தேதி முதல் சிரியா எல்லைக்குள் நுழைந்து அங்குள்ள குர்திஷ் மக்கள் மீது தரைவழி மற்றும் வான்வழி மூலமாக ஆவேச தாக்குதல் நடத்தி வருகிறது.

1397 total views