சாதனைப் பெண் : 40 வயதிற்குள் 44 குழந்தைகள்!

Report

மரியம் (mariam) உகண்டா நாட்டுப் பெண். அவர் தனது 40 வயதிற்குள் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் .

தனது 12 ஆவது வயதில் திருமணமானார். 13 ஆவது வயதில் இரட்டைக் குழந்தைகள் பெற்றெடுத்தார். இவர் மொத்தமாக 6 தடவைகள் 2 குழந்தைகள். 4 தடவைகள் 3 குழந்தைகள். 3. தடவைகள் 4 குழந்தைகள் எனப் பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்.

இரு தடவைகள் மட்டும் ஒவ்வொரு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார். இவற்றில் 6 பிள்ளைகள் இறந்து விட தற்பொழுது 38 பிள்ளைகளுடன் ஒரு குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றார்.

மரியம் இன்று உலகில் சாதனைப் பெண்ணாக கருதப்படுகிறார். சர்வதேச ஊடகங்கள் அவர் பற்றிய செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.

இந்தத் தாய் குழந்தைகளைப் பெற்றெடுத்ததைவிட அவர்களுக்கு உணவு போடுதலையே சவாலாகக் கொண்டுள்ளார். கணவன் குடிக்கு அடிமையானவன். மனைவியை துன்புறுத்தல் செய்பவன். வருடத்துக்கு ஒரு முறை மட்டும் இரவில் வந்து விடிய போய்விடுபவன்.

பல பிள்ளைகள் தந்தையைக் கண்டதில்லை. இப்போது 23 வயதாக இருக்கும் மூத்த மகன் தனது 13 ஆவது வயதில் இறுதியாக தந்தையைப் பார்த்ததாகக் கூறுகிறான்.

இந்தத் துன்பியல்களையெல்லாம் தாங்கி மரியம் பிள்ளைகளுக்கு உணவளிக்க பல வேலைகளைச்செய்கிறாள். ஒரு நாள் கூட பட்டினி போடவில்லையென்று பெருமை கொள்கிறாள்.

பிள்ளைகளின் கல்விக்காக போராடுகிறாள். ஒரு நாள் வலிகள் நீங்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளாள். தற்போது பிரசவ வலிமட்டுமே நீங்கியிருக்கிறது. என்றோ ஒரு நாள் இன்பப்பரவசம் அடையும் நாளை நினைத்தபடி வேலைக்குப் போகிறாள்.

ஆனால் அப்பாவோ மீண்டும் எங்கேயோ குடித்துவிட்டு குடிப்பெருக்க முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்.

3234 total views