இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 10 பேர் பலி! காசா முனைப் பகுதியில் சம்பவம்

Report

காசா முனைப்பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீனியர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நடந்து வருகின்றன.

காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் போராளிகள் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக காசா நகரின் மீது இஸ்ரேல் நாட்டு போர் விமானங்களும் குண்டுகள் வீசுவது வழக்கம்.

ஹமாஸ் போராளிகளுக்கு பாலஸ்தீன மக்கள் ஆதரவு அளிக்கின்றனர். ஆனால் போராளிகளை இஸ்ரேல் அரசு பயங்கரவாதிகள் என கூறுகிறது.

இதற்கிடையில், காசா முனைப்பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டான்.

இதையடுத்து ஒரே நாளில் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் 200-க்கும் அதிகமான ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், போராளிகளின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் விமானப்படை வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 10 பாலஸ்தீனியர் கள் உயிரிழந்தனர். மேலும், 45 பேர் படுகாயமடைந்துள்ளதாக பாலஸ்தீன் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

725 total views