கொரோனோ போன்ற பெரும் வைரஸ் நோயை முன்னரே கணித்த மைக்கேல் ஜாக்சன்! மெய்காப்பாளர் கூறிய தகவல்

Report

கொரோனோ போன்ற பெரும் வைரஸ் நோயை மைக்கேல் ஜாக்சன் முன்னரே கணித்திருந்தார் என்று அவரின் முன்னாள் மெய்க்காப்பாளர் தெரிவித்துள்ளார்.

பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மெய்க் காவலராக இருந்தவர் மேட் ஃபிட்டஸ்.

அவர் அளித்த பேட்டியில், இயற்கைப் பேரழிவு வரும் என்பதை மைக்கேல் ஜாக்சன் உணர்ந்திருந்தார்.

மக்கள் அனைவரும் கொத்துக் கொத்தாக இறக்க வேண்டிய சூழல் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றும் ஒற்றைக் கிருமி உலகம் முழுக்கப் பரவும் என்றும் அவர் கணித்திருந்தார்.

அவர் பல்வேறு நாடுகளுக்குத் தொடர்ந்து பயணித்து வந்தார். மேற்குறிப்பிட்ட காரணங்களாலேயே அவர் மாஸ்க்கை அணிந்து வந்தார். பல்வேறு தரப்பினரால் கேலிக்குள்ளானபோதும் அவர் அதை விடவில்லை.

அவர் அப்போது அச்சப்பட்டது இப்போது நடந்துவிட்டது என்று நினைக்கிறேன் என கூறியுள்ளார்.

10308 total views