சீனாவில் கொரோனாவால் உயிரிழந்த 29 பேரின் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை! முடிவில் வெளிவந்த உண்மைகள்

Report

கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகள் இறுதிச்சடங்கில் அதிகளவில் மக்கள் கலந்து கொள்ள வேண்டாம் என உலகளவில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் அதற்கான காரணம் இறந்தவர்களின் பிரேத பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சீனாவில் தனது தொடக்கத்தை கண்ட கொரோனா வைரஸால் இதுவரை அங்கு 3000க்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு மொத்தமாக 81000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

இந்த சூழலில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் இறுதிச்சடங்கை அதிக நேரம் நடத்த வேண்டாம் என அதில் அதிக மக்கள் கூட வேண்டாம் எனவும் தொடர்ந்து உலகளவில் அறிவுறுத்தப்படுகிறது.

ஏனெனில் சடலத்தில் இருந்து கொரோனா தொற்றும் எனவும், நுரையீரலில் அந்த வைரஸ் இருக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சீனாவில் கொரோனாவால் உயிரிழந்த 29 பேரின் சடலங்களுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், உயிரிழந்தவர்களின் நுரையீரலில் கொரோனா வைரஸ் அப்படியே தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் பிரேத பரிசோதனையில் நோயாளியின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டிருந்ததும் மூச்சுக்குழாய்களையும் அது கணிசமாக சேதப்படுத்தியதும் உறுதியாகியுள்ளது.

எனவே, இறந்தவர்களின் உடல்களில் வைரஸ் வலுவாக வாழ்கிறது என்ற உண்மையை கருத்தில் கொண்டு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் தங்களுக்கும் அது பரவாமல் இருக்க தற்காத்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

3425 total views