மக்களின் காணொளி பார்த்துபின் கண்ணீர் சிந்தியதாக கூறிய அபுதாபி பட்டத்து இளவரசர்! எதற்காக தெரியுமா?

Report

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மக்களின் உணர்வு பூர்வமான வீடியோவைப் பார்த்தபின் கண்ணீர் சிந்தியதாக அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் மொஹமட் பின் சயீத் அல் நஹ்யான் கூறினார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனாவிற்கு 6 பேர் பலியாகியுள்ள நிலையில் 664 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

உங்களையும், சொந்த மக்களை போல் விசுவாசமாக இருக்கும் நீங்கள் இருக்கும் நாட்டையும் கடவுள் பாதுகாக்கட்டும்.

கடவுள் நினைத்தால் நம்மை இந்த இக்கட்டான சூழ்நிலையை பாதுகாப்பாக கடந்து செல்ல வைக்க முடியும் என இளவரசர் கூறினார்.

சுகாதார ஊழியர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ஐக்கி அரபு எமிரேட்ஸ் மக்கள் வீட்டு பால்கனியில் நின்று தேசிய கீதம் பாடிய காட்சியை கண்டு தான் கண்ணீர் சிந்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

6337 total views